இயக்குநர் சீனு ராமசாமி விவாகரத்து அறிவிப்பு!


தமிழ் திரையுலகில் 2024ம் ஆண்டு விவாகரத்துக்கான வருடமாக அமைந்திருக்கிறது. திரை நட்சத்திரங்கள் அமலா பால், சமந்தா, தனுஷ், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் இமான், ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி , தனது 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக கூறி தனது விவாகரத்து செய்தியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அதிகாலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 'அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி G.S.தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.

இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” என்று சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார்.

x