HBD RAJINIKANTH: ரஜினி கொடுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் இதுதான்!


சென்னை: சிலர் மட்டும்தான் நடிகர்கள் என்பதையும் தாண்டி ரசிகர்கள் வாழ்வில் பிரிக்க முடியாத உணர்வாக இருப்பார்கள். அவர்களின் படம்தான் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். இந்த வெகு சில நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். பெங்களூரில் நடத்துநராக இருந்த சிவாஜி ராவ், ரஜினிகாந்தாக மாறிய கதை அனைவருக்கும் தெரியும். ஆனால், ரஜினிகாந்த் மற்றவர்களுக்குக் கொடுக்கும் காஸ்ட்லி கிஃப்ட் என்ன தெரியுமா?

தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் என்ற விஷயம் அறிந்து கொண்டால் அவர்களுக்கு ரஜினிகாந்த் கொடுக்கும் முதல் பரிசு என்ன தெரியுமா? ’ஹியூமன்ஸ் ஆஃப் ஹிமாலயன்’ என்ற புத்தகம்தான். தனக்கு மிகவும் பிடித்த புத்தகமாக இதை குறிப்பிடுபவர் தன் தரப்பில் இருந்து மற்றவர்களுக்குக் கொடுக்கும் காஸ்ட்லி பரிசு இது என்பார் சிரித்துக் கொண்டே. அதேபோல, நகைகள் மீது ரஜினிகாந்திற்கு பெரிதும் விருப்பம் இல்லை.

கழுத்தில் எளிய ருத்ராட்சம் கையில் செம்பு காப்பு மட்டுமே எப்போதும் அணிவார். மகள்கள் தொடர்ந்து கேட்டால் மட்டுமே கையில் வாட்ச் அணிந்து கொள்வார். உடல்நிலை சரியில்லை என்றாலும் முடிந்தளவு வாக்கிங் மற்றும் யோகா செய்வதில் இருந்து தவறமாட்டார் ரஜினி. வருடா வருடம் இமயமலைக்கு செல்வதையும் பின்பற்றி வருகிறார். இந்த விஷயங்களே இப்போதும் தன்னை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

x