சென்னை: நடிகர்கள் விக்ரம், துஷாரா விஜயன் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
'தங்கலான்' படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம், 'சித்தா' படப்புகழ் அருண் குமார் இயக்கத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகி இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்றிருக்கிறது. இதில் விக்ரமுடன் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசரில் விக்ரம் vs எஸ்.ஜே. சூர்யா என்ற டிராக்கை பார்க்க முடிகிறது.
'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது.