லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர். சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதற்காக படக்குழு அங்கு சென்றுள்ளது. 10 நாட்கள் நடக்கும் படப்பிடிப்பில் இந்தி நடிகர் ஆமீர்கான் பங்கேற்கிறார் என்று கூறப்படுகறது. அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இந்த மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.