சசிகுமார் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’


சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி' என தலைப்பு வைத்துள்ளனர். சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். அபிஷன் ஜீவிந் இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் நசரேத் பசிலியான்-மகேஷ் ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். ‘ஃபீல் குட் ஃபேமிலி’ படமாக உருவாகும் இதன் டீஸர் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

x