சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்கா கௌரி குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்வில் முக்கிய பெண்களாக அம்மா, அக்கா மற்றும் மனைவியை குறிப்பிடுவார். அப்பா இறந்த பிறகு தனது அக்கா கெளரிதான் தன்னை கண்ணும் கருத்துமாக வளர்த்து முன்னுக்கு கொண்டு வந்ததாக பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது அக்காவின் பிறந்தநாளுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.
அக்கா, மனைவி, அக்கா கணவர் மற்றும் அவருடைய மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, “என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனான அக்கா உனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! குழந்தைப் பிறந்த பிறகுதான் நீ எம்பிபிஎஸ் படித்து முடித்தாய். உனது 38ஆவது வயதில் எம்டி-யில் கோல்டு மெடல் வாங்கினாய். இப்போது 42ஆவது வயதில் பல தடைகளை தாண்டி எஃப்ஆர்சிபி முடித்திருக்கிறாய். உன்னை நினைத்து அப்பா நிச்சயம் பெருமைப்படுவார். உனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் அத்தானுக்கும் வாழ்த்துகள்!’ எனப் பதிவிட்டுள்ளார்.