அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ.100 கோடி வசூலைத் தொட்டு ‘புஷ்பா2’ சாதனை


’புஷ்பா2’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 100 கோடி வசூலை ப்ரீ புக்கிங்கில் பெற்று விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் ‘புஷ்பா2’ திரைப்படம் நாளை பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. முதல் பாகம் வெளியாகி ஹிட்டான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் நடந்தது. ஆகஸ்ட் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பின்பு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக டிசம்பர் மாதம் தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் போஸ்டர், பாடல்கள், டீசர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ரூ. 100 கோடி வசூலைப் பெற்று விட்டது என படக்குழு அறிவித்திருக்கிறது. ’புஷ்பா’ படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இரண்டாம் பாகத்தில் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ’புஷ்பா’ படத்தின் மூன்றாம் பாகமும் உறுதி செய்யப்பட்டுள்ளதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

x