ஆசிட் வீச்சு மிரட்டல்: சைபர் கிரைமில் புகார் கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனா!


இணையத்தில் தனக்கு தொடர்ந்து ஆசிட் வீச்சு மிரட்டல்கள் வருவதாக பிக்பாஸ் புகழ் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனில் பிக்பாஸ் டைட்டில் ஜெயித்த அர்ச்சனா இந்த சீசனில் போட்டியாளரான அருணிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் உறுதியாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் ஆண்கள் vs பெண்கள் என இருந்த இந்த எட்டாவது சீசன் தற்போது தனிப்பட்ட விளையாட்டாக மாறியிருக்கிறது. குறிப்பாக, அருண் பிரசாத் மற்றும் முத்துக்குமரன் இருவருக்குமிடையேயான மோதல் மற்றும் புகைச்சல் வெளிப்படையாகவே வந்திருக்கிறது.

இதனால், முத்துக்குமரன் ரசிகர்கள் அர்ச்சனாவை இணையத்தில் தாக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்த ஸ்கிரீன்ஷாட்களை அர்ச்சனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘வாழ்க்கை என்பது கிரிக்கெட் போல! உங்களுக்குப் பிடித்த டீமுக்கு நீங்கள் ச்சியர்ஸ் செய்யலாம். எனக்குத் தொடர்ந்து ரேப் மற்றும் ஆசிட் வீச்சு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.

நான் பகிர்ந்திருக்கும் இந்த ஸ்கிரீன் ஷாட் வெறும் உதாரணங்கள்தான். இதுபோல, நிறைய அசிங்கமான மெசேஜ் எனக்கு தினமும் வருகிறது. தேவையில்லாத மெசேஜ் இதற்குமேல் வந்தால் சம்பந்தப்பட்ட சோஷியல் மீடியா பக்கங்களின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்’ என சைபர் க்ரைம் போலீஸாரை டேக் செய்து தெரிவித்துள்ளார்.

x