சமூக வலைத்தளங்களில் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!


திரைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை வெளியிட படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரிய பட்ஜெட் மற்றும் சிறிய பட்ஜெட் படங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் விஷயமாக விமர்சனங்கள் இருக்கிறது. குறிப்பாக, திரையரங்குகளின் வாசலில் நின்று முதல் நாள் விமர்சனங்கள் எடுக்கும் யூடியூப் சேனல்கள் மற்றும் இணையத்தில் வெளியாகும் விமர்சனங்களை வைத்தே அந்தப் படத்திற்கு போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு ரசிகர்கள் வருகிறார்கள்.

‘இந்தியன்2’, ‘கங்குவா’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் படுதோல்விக்கு அந்த படங்களை கடுமையாக டிரோல் செய்து ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்களே முக்கிய காரணமாக அமைந்தன.

இதனால், படம் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு யூடியூப், எக்ஸ் என எந்தவிதமான சமூகவலைதளங்களிலும் சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அவதூறு பரப்புவது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் என நீதிபதி சவுந்தர் தெரிவித்துள்ளார். விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள், யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

x