சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை: அடுத்த வருடம் படப்பிடிப்பு


மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. ஜெயராம் சங்கரன் இயக்கும் இந்தப் படத்தை எஸ்டிஆர்ஐ சினிமாஸ் சார்பில் எஸ்.பி. விஜய் அமிர்தராஜ் தயாரிக்கிறார். சில்க் ஸ்மிதாவாக, சந்திரிகா ரவி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்குகிறது. சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் பற்றி மற்ற விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

x