சென்னை: நடிகை சிநேகா நடத்தி வரும் ‘சிநேகாலயா சில்க்ஸ்’ சார்பில் மார்வெல்ஸ் மார்கழி என்ற நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது.
இதில் நடிகை சிநேகா, அவரது கணவர் பிரசன்னா, பாடகர்கள் சந்தீப் நாராயண், மகதி, சூர்யா கெய்த்ரி, அருணா சாய்ராம், ஸ்ரீரஞ்சனி சந்தனகோபாலன், ஹரி பிரியா, ஷண்முகா பிரியா, சிக்கில் குருச்சரண் உள்ளிட்டோர் பாரம்பரிய நகைகள் மற்றும் உடையலங்காரத்தில் ஒய்யார நடையில் பார்வையாளர்களை கவர்ந்தனர். அதனைத் தொடர்ந்து சினேகா- பிரசன்னா இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ”திரை உலகினரின் வாழ்க்கையில் ஏற்படும் விவாகரத்து குறித்து அறிவுரை யாரும் வழங்க முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையாக உள்ளது. அதற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் விரும்பினார்கள். கண்டிப்பாக நல்லது செய்வார் என நம்புகிறார்கள், நாங்களும் நம்புகிறோம். நல்ல படம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். மார்கழி மாதம் என்றால் கர்நாடக இசை கேட்டு கொண்டிருக்கும். இந்த இசை பாடும் கலைஞர்களை பாரம்பரிய உடை அணிந்து பேஷன் ஷோ செய்ய வேண்டும் என்ற விஷயத்தை நம்மிடம் கொண்டு வந்தார்கள். அந்த ஐடியா எங்களுக்கும் பிடித்திருந்தது” என்றனர்.
‘கங்குவா’ படத்திற்கு வந்த மோசமான விமர்சனம் பற்றிய கேள்விக்கு, “யாரும் மோசமான படம் கொடுக்க வேண்டும், இசை கொடுக்க வேண்டும் என உழைப்பதில்லை. அந்த காலத்து பாடல்களும் இந்த காலத்து பாடல்களையும் மக்கள் ரசிக்க தான் செய்கிறார்கள். பாடல் பிடித்திருக்கிறது இல்லை என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள்தான் நீதிபதிகள். அதேபோல, பிரபலங்களின் விவாகரத்து சமீபகாலத்தில் அதிகரித்து வருகிறது. பிறரின் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து சொல்ல முடியாது. நல்ல புரிதல் இருந்தால் எந்த திருமண வாழ்க்கையும் நீடித்திருக்கும்” என்றனர்.
பிரபலங்கள் விவாகரத்து; சிநேகா- பிரசன்னா சொன்ன 'நச்' பதில்! | HT#Sneha | #Prasanna | #SnehaPrasanna | #rampwalk #snehalayasilks | #saree | #cinemanews | #cinemaupdate | #carnaticmusic | #HinduTamil pic.twitter.com/dn76HV1Lxz
— Tamil The Hindu (@TamilTheHindu) December 2, 2024