சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உட்பட பலர் நடித்து வரவேற்பைப் பெற்றுள்ள படம், ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படம் ரூ.300 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்தார்.
இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஆர்.மகேந்திரன், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மற்றும் இந்திய ராணுவம் குறித்து சிறப்பாக இந்தப் படத்தை உருவாக்கியதற்குத் தனது பாராட்டுகளை அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன், இந்தப் படத்தை உருவாக்க, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதற்கு, இந்திய ராணுவ அமைச்சகம் மற்றும் இந்திய ராணுவம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்துள்ளார்.