பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன்: இந்த வாரம் வெளியேறப் போவது யார்?


சென்னை: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்வு ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் குறைவாகவே உள்ளது. தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள். ஆனாலும் அவர்களாலும் போட்டியில் எந்தவிதமான சுவாரஸ்யமும் ஏற்படவில்லை.

நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் ‘இன்னமும் இந்த வீட்டில் நீங்கள் வாழவே தொடங்கவில்லை’ என பிக்பாஸே கடுப்பாகும் அளவிற்குதான் போட்டியாளர்களின் விளையாட்டு உள்ளது.

18 போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே வெளியேறிய சாச்சனா சனிக்கிழமை எபிசோடிலும், ஆர்ஜே ஆனந்தி ஞாயிறு எபிசோடிலும் வெளியேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

x