கோவாவில் திருமணம்: திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ் தகவல்!


கோவாவில் தனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதை நடிகை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்திருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலை வெளிப்படையாக அறிவித்தார். தனது 15 வருட கால பள்ளிநண்பரும் தொழிலதிபருமான ஆண்டனியை தான் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். அடுத்த மாதம் கோவாவில் இவர்கள் திருமணம் என்ற செய்தி பரவிய நிலையில், இன்று நடிகை கீர்த்தி சுரேஷ் அதை உறுதி செய்திருக்கிறார்.

தனது அப்பா சுரேஷ், அம்மா மற்றும் அக்காவுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அங்கு பக்தர்கள் கீர்த்தி சுரேஷூடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் தனது திருமணம் பற்றிய கேள்விக்கு கோவாவில் திருமணம் என்பதையும் அவர் உறுதி செய்தார்.

x