காதலை உறுதி செய்தார் கீர்த்தி சுரேஷ்


நடிகை கீர்த்தி சுரேஷ், தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்தக் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அடுத்த மாதம் 11-ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக, கீர்த்தி சுரேஷ் காதலருடன் இணைந்திருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “15 வருடங்களைக் கடந்து விட்டோம். இது எப்போதும் தொடரும்” என தெரிவித்துள்ள அவர், ஆண்டனியின் பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். ஆண்டனி தொழிலதிபராக இருக்கிறார்

x