நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!


சென்னை: நடிகை நயன்தாரா மீது தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் கடந்த 18ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தின் சில படப்பிடிப்புக் காட்சிகளை பயன்படுத்த நயன்தாரா தரப்பு தனுஷ் தரப்பிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், அதற்கு படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், கோபமடைந்த நயன்தாரா தன் மீதுள்ள தனிப்பட்ட வன்மத்தின் காரணமாகவே தனுஷ் அனுமதி மறுத்தார் என கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி நயன்தாரா தன் ஆவணப்படத்தில் ‘நானும் ரெளடிதான்’ படப்பிடிப்புக் காட்சிகளைப் பயன்படுத்தியதால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷின் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வொண்டர்பார் நிறுவனத்திற்கு வழக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்தார். மேலும், இதுதொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்

x