நடிகர் நாகசைதன்யாவை அடுத்து தம்பி சொன்ன குட்நியூஸ்: குவியும் வாழ்த்து!


சென்னை: நடிகர் அகில் அகினேனி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கிறார்.

நடிகர் நாகர்ஜூனாவின் இளையமகன் அகில் அகினேனி தனக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருக்கும் செய்தியை பகிர்ந்துள்ளார். ஜைனப் ராவ்ஜி என்பவரைத்தான் திருமணம் செய்ய இருக்கிறார். ’என்னுடைய ஆன்மாவின் துணையை நான் கண்டுபிடித்துவிட்டேன். அவருடன் நிச்சயம் முடிந்துவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்’ என புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி நாகசைதன்யா- ஷோபிதாவின் திருமணம் நடக்க இருக்கிறது. இதனையடுத்து, அகில் அகினேனியும் குட் நியூஸ் சொல்லியிருப்பதால் ரசிகர்கள் வாழ்த்து சொல்லியிருக்கின்றனர். நாகசைதன்யா - சமந்தா திருமணத்திற்கு முன்பு, அகிலுக்கு ஷ்ரியா என்ற ஆடை வடிவமைப்பாளருடன் நிச்சயம் முடிந்து நின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

A post shared by Akhil Akkineni (@akkineniakhil)

x