‘கங்குவா’ தோல்வி: கோயிலில் யாகம் நடத்திய சூர்யா- ஜோதிகா?


பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த படம் ‘கங்குவா’. சூர்யாவின் சினிமா கரியரில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட படம் இது என்பதாலும் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜ் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என்று சொன்னதாலும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்பு மோசமான தோல்வியைத் தழுவியது.

இதுமட்டுமல்லாது, திட்டமிட்டே படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்களைப் பரப்புவதாக ஜோதிகா காட்டம் தெரிவித்தார். இதனால், படம் வெற்றி பெற வேண்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா, இயக்குநர் சிறுத்த சிவாவுடன் நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நேற்று மனைவி ஜோதிகாவுடன் கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். ‘கங்குவா’ படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ள நிலையில் மூகாம்பிகை கோயிலில் சண்டி தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா. வாழ்க்கையில் தொடரும் தடைகளைத் தகர்க்கவே இந்த சண்டி யாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x