சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் விவாகரத்து வழக்கில் அவதூறு பரப்பும் வீடியோக்கள், செய்திகளை நீக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். சாய்ரா பானுவும் இதை உறுதி செய்தார். இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மீது அவதூறு பரப்பும் விதமாக பல்வேறு தகவல்கள் இணையவெளியில் பார்க்க முடிந்தது. இது உண்மைக்கு புறம்பானது என்று அவரது மகன் அமீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில், தங்கள் விவாகரத்து தொடர்பாக அவதூறு பரப்பும் சமூகவலைதளங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களை நீக்கக்கோரி ரஹ்மான் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உடனடியாக அவற்றை நீக்காவிட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.