சென்னை: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனக்கு திருமணம் வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்.
’ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் தனது திருமணம் பற்றிய கருத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும், தன்னை சுற்றியுள்ள பல உறவுகள் திருமணத்திற்குப் பிறகு சந்தோஷமாக இல்லை என்றும் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
திருமணம் செய்வதற்காக தன்னுடைய தாயார் மேட்ரிமோனியில் கணக்கு ஒன்றை தொடங்கியிருப்பதாகவும் ஆனால், அது போலி என்றும் பலரும் நினைத்துள்ளதாகவும் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா. சமீபத்தில் நடிகர் அர்ஜூன் தாஸூடன் இவர் எடுத்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி காதல் கிசுகிசு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.