ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்த படம், ‘காந்தாரா’. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்த கன்னடப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து இதன் முதல் பாகம் உருவாகும் என்று கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி.
அதன்படி இதன் முதல் பாகம் ‘காந்தாரா: அத்தியாயம் 1’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படம் காந்தாரா உலகின் கடந்த காலத்துக்குப் பார்வையாளர்களைக் கூட்டிச் செல்லும் என்று கூறப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025-ம் ஆண்டு அக்.2-ல் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.