கிளேடியேட்டர் 2 - திரை விமர்சனம்


சென்னை: கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான ரிட்லி காட்ஸே இயக்கத்தில் ‘கிளேடியேட்டர்’ படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனத்தைப் பார்க்கலாம்.

’கிளேடியேட்டர்’ படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின் கதையும் அமைந்திருக்கிறது. அதாவது முதல் பாகத்தில் மார்கஸ் அடிமைப்படுத்தப்பட்டு கிளேடியேட்டராக மாற்றப்படுவார். பின்னர், ரோமானிய மக்களை கொடுமைப்படுத்தும் சீசரின் மகன் கொமடஸை வீழ்த்தி மக்களை காப்பாற்றி தன் உயிரைக் கொடுப்பார். இரண்டாம் பாகத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான்.

முதல் பாகத்தில் மாக்ஸிமஸ் மற்றும் அவருக்கு உதவி செய்யும் இளவரசி லூசில்லாவுக்கு பிறக்கும் மகன் தான் லூசியஸ்தான் (பால் மெஸல்) இந்த பாகத்தின் கதாநாயகன். ரோம் நாட்டு மக்கள் மீண்டும் கொடூர ஆட்சியில் சிக்கி இருக்கிறார்கள். தன் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ளும் கிளேடியேட்டராக இருக்கும் லூசியஸ் தன் மக்களை காப்பாற்றும் கதைதான் ‘கிளேடியட்டர்2’. முதல் பாகத்தில் 2000 ஆம் காலக்கட்டத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப விஷயங்களைப் பயன்படுத்தி இருந்தார்கள். ஆனால், இப்போது 2024 ஆம் ஆண்டிற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். கலை இயக்கம், விஎஃப்எக்ஸ், சிஜி காட்சிகள், நடிகர்கள் என ரூ. 1700 கோடி செலவில் படம் எடுக்கப்பட்டிருப்பதால் எல்லா விஷயங்களும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

கதாநாயகன் பால் மெஸல் சண்டை காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு இந்தப் படம் ட்ரீட் என்பதில் ஐயமில்லை. ஆனால், முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு வலுவான எமோஷனல் கனெக்ட் இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது குறை. சில இடங்களில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாகவே காட்சிகள் அமைந்திருக்கிறது என்றாலும், முதல் பாகத்திற்கு நியாயம் செய்யும் விதமாகவே இரண்டாம் பாகம் அமைந்திருக்கிறது.

x