சென்னை: நடிகர் தனுஷை கடுமையாகத் தாக்கி நடிகை நயன்தாரா பகிர்ந்த பதிவை லைக் செய்து நடிகைகள் பலரும் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
தன் மீதுள்ள தனிப்பட்ட வன்மத்தின் காரணமாகவே நடிகர் தனுஷ் ‘நானும் ரெளடிதான்’ படக்காட்சிகளை தனது ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ டாக்குமெண்ட்ரியில் பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை என நடிகை நயன்தாரா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விஷயம் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. நயன்தாராவுக்கும், தனுஷூக்கும் ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவு பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனுஷூக்கு எதிரான நடிகை நயன்தாராவின் பதிவை நடிகைகள் ஸ்ருதிஹாசன், நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன், அபிராமி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி உள்ளிட்டப் பலரும் லைக் செய்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருடனும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் முன்பு தனுஷூக்கு பிரச்சினை எழுந்ததாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை பார்வதியும் நயன்தாராவின் பதிவை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து ஆதரவு கொடுத்திருக்கிறார்.