பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூர்யா - நடந்தது என்ன?


சென்னை: ‘கங்குவா’ பட நிகழ்வில் தாமதமாக வந்ததற்காக நடிகர் சூர்யாவிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படம் நாளை வெளியாக இருக்கிறது. இதற்காக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் படக்குழு புரோமோஷன் செய்து வருகிறது. நேற்று மும்பையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்திருக்கிறது. அதில், சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் தாமதமாகவே நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். படக்குழு நிகழ்வுக்கு சொன்ன நேரத்தில் வந்த பத்திரிகையாளர்கள் இதனால் கோபம் அடைந்துள்ளனர்.

இதில் அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் சூர்யாவிடம் இதுபற்றி கோபமாக கேள்வி எழுப்ப அதற்கு சூர்யா, பிற நிகழ்வுகளில் இருந்து வர தாமதமாகி விட்டது என்று விளக்கம் கொடுத்து மேடையில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x