நடிகர் விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்சேதுபதி மகன் சூர்யா அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஃபீனிக்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் தான் சூர்யாவின் ‘கங்குவா’ படமும் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்தியா முழுவதும் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைகளில் ‘கங்குவா’ படம் வெளியாக இருக்கிறது எனத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்திருந்தார்.
இதனால், ‘ஃபீனிக்ஸ்’ படம் வெளியாகும் போது எதிர்பார்த்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனைக் கருத்தில் கொண்டே படக்குழு இதன் வெளியீட்டுத் தேதியை தவிர்க்க இயலாத காரணங்களால் தள்ளி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது.
#phoenix #veezhaan will rise and shine soon.. Thank you all. keep supporting us.. pic.twitter.com/KdZK5JGCGV
— @ActionAnlarasu007 (@ActionAnlarasu) November 13, 2024