பிக்பாஸ் தமிழ்8 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததற்கு பிறகு சுனிதா பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நான்காவது போட்டியாளராக கடந்த வாரம் சுனிதா குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். முதல் வாரத்தில் ரவீந்தர், பின்பு அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதில் சுனிதா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘கடந்த 35 நாட்களும் எண்ணிலடங்கா நினைவுகளை இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது. என் வாழ்நாள் முழுவதும் இதற்கு நன்றியுள்ளவளாக இருப்பேன். இந்த வீட்டில் ஒவ்வொருவருடைய அன்பும் ஒவ்வொருத்தரும் கற்று கொடுத்த பாடமும் முக்கியமானது’ எனக் கூறியிருக்கிறார்.