'கங்குவா’ படம் வெளியாவதில் சிக்கல்: உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!


’கங்குவா’ படம் திரையரங்குகளில் வெளியாவதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘கங்குவா’ படம் நாளை மறுநாள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படம் வெளியாவதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. அதாவது, ‘கங்குவா’ படத்திற்கு ஃபைனான்ஸ் செய்த அர்ஜூன்லால் காலமாகிவிட்டார். அதற்கு முன்பாகவே அவருக்கு நிதி இழப்பு ஏற்பட்டதால் அவர் திவால் ஆனவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அவரது சொத்துகள் சென்னை உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இவரது கடன்களை வசூலிக்கும் பணியை நீதிமன்ற சொத்தாட்சியர் செய்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு அர்ஜூன் லால் கொடுத்திருக்கும் ரூ.20 கோடியை வரும் நவம்பர் 13ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்தாவிட்டால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுமட்டுமல்லாது படத்தின் முதல் வார வசூலில் 75% தயாரிப்பாளர்களுக்கும் 25% விநியோகஸ்தர்களுக்கும் என்ற பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வராமல் இழுபறியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி எல்லா பக்கமும் ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

x