13 வருடங்கள் கழித்து குழந்தை - மகிழ்ச்சியில் நடிகை வித்யா பிரதீப்!


சென்னை: சின்னத்திரை நடிகை வித்யா பிரதீப் தனக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ள செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

’அவள் பெயர் தமிழரசி’, ‘விருந்தாளி’ உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப். சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். பயோ டெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றவர் தற்போது வெளிநாட்டில் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் அதிகம் பகிர்ந்து கொள்ளாதவர் சமீபத்தில் தனக்குத் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதைப் பகிர்ந்திருந்தார்.

கேரளாவை சேர்ந்த இவர் 18 வயதிலேயே ஃபோட்டோகிராஃபர் மைக்கேல் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இப்போது, தான் பெற்றோர் ஆகியிருக்கும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். ’உன்னால் என் வாழ்க்கையே முழுமையாகி இருக்கிறது. என் மனம் மகிழ்ச்சியால் துள்ளி குதிக்கிறது. உன்னை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்’ எனத் தனது கணவருடன் எடுத்திருக்கும் ஃபோட்டோஷூட்டைப் பகிர்ந்திருக்கிறார்.

A post shared by Dr. Vidya Pradeep (@vidya.pradeep01)

x