சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 14-ம் தேதி வெளியாகிறது.
வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி பிரசாத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “கங்குவா போன்ற பரிசோதனை முயற்சியை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தைரியமாக முன்னெடுத்துள்ளது பெரிய விஷயம்.
வழிபடக்கூடிய கடவுள் தீயாக, நெருப்பாக, குருதியாக இருந்தால் அந்த நில மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வழிபாடு என்ன என்ற விஷயங்களை இதில் கொண்டு வந்திருக்கிறோம். ‘கங்குவா’ வெறும் ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல் நீங்கள் எடுத்துச் செல்ல நல்ல விஷயமும் இருக்கும். மன்னிப்பைப் பற்றி இந்தப் படம் உயர்வாகப் பேசும்.
’கங்குவா’ தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். 3000 பேரின் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். படம் நெருப்பு மாதிரி இருக்கும்” என்றார்.