3 இல்லை, 2 பாகங்களாக  உருவாகிறது ‘ராமாயணம்’!


இந்திப் பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை படமாக்குகிறார். இந்தப் படத்தை பிரைம் போகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ஹாலிவுட்டில் பணியாற்றும் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார்.

இதில் ரன்பீர் கபூர், ராமனாக நடிக்கிறார். சாய் பல்லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடிக்கிறார்கள். மேலும் ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. 3 பாகங்களாக உருவாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் 2 பாகங்களாக உருவாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இதுபற்றி தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ள பதிவில், “இந்த காவியத்தை பத்து வருடத்துக்கு முன்பே பெரிய திரையில் கொண்டு வர கனவு கண்டேன். ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் இதயங்களை ஆளும் கதை இது. இது உயிர்ப்பிக்கப்படுவதைப் பார்ப்பது எனக்குப் பெருமையான தருணம்.

ராமாயணத்தின் அழகான, உண்மையான மற்றும் புனிதமான வடிவத்தை உலகுக்கு வழங்க இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படங்களின் ரிலீஸ் தேதியையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி 2026-ம் ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகமும் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு இரண்டாம் பாகமும் வெளியாக இருக்கிறது.

x