‘அமரன்’ பட இயக்குநரின் அடுத்த ஹீரோ இவர்தானா? - தீயாய் பரவும் தகவல்


சென்னை:அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது அடுத்தப் படம் குறித்து மனம் திறந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் ‘அமரன்’ திரைப்படம் இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்த கேள்விக்கு சமீபத்திய பேட்டியில் அவர் பதிலளித்திருப்பதாவது, “நீண்ட நாட்களாக ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். அவர் ஒரு பவர்ஃபுல்லான நடிகர். ‘அமரன்’ படத்தின் கதை போல என்னுடைய அடுத்தப் படமும் சர்வைவல் கதையை கொண்டிருக்கும்" என்றார்.

பவர்ஃபுல் நடிகர் என்று ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷைதான் குறிப்பிடுகிறார் என்று சொல்லி வருகின்றனர் இணையவாசிகள். தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’, ‘இட்லிகடை’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். இவரது ‘குபேரா’ படமும் ரிலீஸூக்கு தயாராகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

x