’ஜெய்பீம்’ படத்தை ஓடிடியில் வெளியிட்டது தவறு என நடிகர் சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, லிஜோமோல் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரிடையாக வெளியானது. கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டம் என்பதாலேயே இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது. விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்டது தவறு என வருத்தம் தெரிவித்திருக்கிறார் சூர்யா.
இது தொடர்பாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்திருப்பதாவது, “சிவா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு நான் வெளியே வந்த போது அங்கே முதியவர் ஒருவர் ‘ஜெய்பீம்’ படத்திற்கான டிக்கெட் எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.
நான் அவரிடம் சென்று திரையரங்கில் அந்தப் படம் வெளியாகவில்லை. ஓடிடியில் தான் வெளியாகி இருக்கிறது என்று சொன்னேன். அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் ‘ஜெய்பீம்’ படத்தை ஓடிடியில் வெளியிட்டது தவறு என உணர்ந்தேன்” என வருத்த தெரிவித்திருக்கிறார். 'ஜெய்பீம்’ படத்தை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.