புகைப்பிடிப்பதை கைவிட்டார் ஷாருக்கான்


பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், புகைப்பிடிப்பதை விட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தனது 59-வது பிறந்த தினத்தை கடந்த 2-ம் தேதி கொண்டாடிய ஷாருக்கான், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்களிடம் பேசும்போது இதை அறிவித்தார்.

அவர் கூறும்போது, “இனி நான் புகைப்பிடிக்கப் போவதில்லை. புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு மூச்சுத் திணறல் ஏற்படாது என்று நினைத்தேன். ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது. கடவுள் அருளால் விரைவில் அது சரியாகி விடும்” என்றார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கடந்த 2011-ம் ஆண்டு ஷாருக்கான் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு நாளைக்கு குறைந்தது 100 சிகரெட்டுகள் பிடிப்பேன்; சில நேரங்களில் சாப்பிடுவதைக் கூட மறந்துவிடும் அளவுக்குப் புகைப்பிடிப்பேன்” என்று கூறியிருந்தார்

x