கன்னட திரைப்பட இயக்குநர் குருபிரசாத் (52). இவர் மட்டா, எத்தேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், ரங்கநாயகா என சில படங்களை இயக்கியுள்ளார்.
ஜிகர்தண்டா, படவா ராஸ்கல் உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். இவர், பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள மாதநாயக்கனஹள்ளியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். தனது முதல் மனைவியை பிரிந்து விட்ட இவர், சுமித்ரா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் குருபிரசாத் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது குருபிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருப்பது தெரியவந்தது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.