பிரபல டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீணா ரவி தனது காதலரை சமூக வலைதளம் மூலம் அறிமுகம் செய்துள்ளார்.
நடிகைகள் காஜல் அகர்வால், எமி ஜாக்சன்,மாளவிகா மோகனன், ராஷி கன்னா உட்பட பலருக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் ரவீனா ரவி. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம்மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ‘வீரமே வாகை சூடும்’, ‘காவல்துறை உங்கள்நண்பன்’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உட்பட சிலபடங்களில் நடித்துள்ளார். இவர் ‘வாலாட்டி' படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமார் என்பவரைக் காதலித்து வருகிறார். தனது காதலரை சமூக வலைதளத்தில் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் தரப்பில் கூறும்போது,“வாலாட்டி படத்துக்காக ரவீணா ரவி டப்பிங் பேசினார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்ததை அடுத்து திருமணம் செய்து கொள்ளஇருக்கின்றனர். தேதி முடிவாகவில்லை.இப்போது ‘வளா’ என்ற மலையாளப் படத்தில் ரவீணா நடித்து வருகிறார். அதற்காக கோழிக்கோடு சென்றுள்ளார்” என்றனர்.