நடிகை நயன்தாராவின் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ ஆவணப்படம் நவம்பர் 18 அன்று வெளியாகிறது.
நடிகை நயன்தாரா- விக்னேஷ்சிவனின் திருமணம் மற்றும் நயன்தாரா அவரது வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ டாக்குமெண்ட்ரி எடுத்துரைக்க இருக்கிறது. அவரது பிறந்தநாளான நவம்பர் 18 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியராகிறது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நெட்ஃபிலிக்ஸ் தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ‘தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிர்ந்திடாத நடிகை நயன்தாராவின் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்ட்ரியில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். தங்கள் கனவுகளையும் இலக்குகளையும் அடைய நினைப்பவர்களுக்கான உத்வேகமாக இந்த டாக்குமெண்ட்ரி இருக்கும்.
மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில்துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக அவரது பல முகங்களை இந்த டாக்குமெண்ட்ரியில் பார்க்கலாம்’ எனத் தெரிவித்துள்ளது.
நயன்தாராவுக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கழித்து இந்த டாக்குமெண்ட்ரி வெளியாகிறது. இவரது திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் மற்றும் பாடல்கள் குறித்தான NOC வாங்க இருந்ததால் இந்த கால தாமதம் எனவும் சொல்லப்படுகிறது.
Thirai-layum natchathiram, vaazhkailayum natchathiram
Watch Nayanthara: Beyond The Fairy Tale on 18 November, only on Netflix!#NayantharaOnNetflix pic.twitter.com/5m9UbBNZ6M— Netflix India South (@Netflix_INSouth) October 30, 2024