பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் எண்ட்ரி யார்?!


பிக்பாஸ் 8 தமிழ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் போட்டியாளர் யார் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்8 தமிழ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. முதல் வாரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரும் இரண்டாவது வாரத்தில் அர்னவும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் வெளியேறி இருக்கிறார்கள். பாய்ஸ் vs கேர்ள்ஸ் எனப் பிரிந்திருக்கும் இந்த எட்டாவது சீசனின் தீமில் முதல் இரண்டு வாரங்களிலேயே இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதால் பெண்கள் அணி எண்ணிக்கையில் அதிகமாகி வலுவாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்ட்ரி குறித்தான பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. அர்னவ் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோதே அவரது மனைவி திவ்யா வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வரப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திவ்யா தரப்பில் இருந்து இன்னும் உறுதியான பதில் பிக்பாஸ் அணிக்கு கிடைக்கவில்லையாம்.

இன்னொரு வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பின்னணிப் பாடகி ஸ்வாகதா வரலாம் என்கிறார்கள். இவர் கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ‘விக்ரம்’ படப்புகழ் மாயாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. வைல்ட் கார்ட் எண்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபாவளியை ஒட்டியோ அல்லது அதற்கு பின்போ இருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

x