நடிகரும் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியுமான பாலா, இப்போது மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இவர், முதலில் சந்தனா என்பவரைத் திருமணம் செய்து பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். கருத்துவேறுபாடு காரணமாக பாலாவும் அம்ருதாவும் பிரிந்துவிட்டனர். பின்னர் எலிசபெத் என்ற மருத்துவருடன் பாலா வாழ்ந்துவந்தார். பின் அவரையும் பிரிந்தார்.
இப்போது தனது உறவுப் பெண்ணான சென்னையைச் சேர்ந்த கோகிலாவை பாலா, நேற்று திருமணம் செய்துகொண்டார். கேரள மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள கலூர் பாவக்குளம் கோயிலில் இத்திருமணம் நேற்று காலை நடந்தது. இதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.