பிக்பாஸ் தமிழ்8 நிகழ்ச்சிக்கு விஜய்சேதுபதியால் வந்த மாற்றம்!


சென்னை: நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக டிவிஆர் புள்ளிகள் கிடைத்திருப்பது பற்றி நிகழ்ச்சி தரப்பு மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். எட்டாவது சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமல் இடத்தை தொகுப்பாளராக விஜய்சேதுபதி நிரப்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

முதல் எபிசோடிலேயே தனது இயல்பான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்தார் விஜய்சேதுபதி. சில தடுமாற்றங்கள் இருந்தாலும், முதல் வாரத்தில் போட்டியாளர்களிடம் சற்றே கடுமை காட்டி ‘தக் லைஃப்’ செய்தார் விஜய்சேதுபதி. இந்த நிலையில், அவர் பங்கேற்ற தொடக்க எபிசோடு தமிழகம் முழுவதும் 9 TVR மற்றும் சென்னையில் 13 TVR புள்ளிகள் பெற்றிருக்கிறது என நிகழ்ச்சி தரப்பு தெரிவித்துள்ளது.

x