‘எமர்ஜென்சி’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: கங்கனா ரனாவத் மகிழ்ச்சி


நடிகையும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத், தயாரித்து இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இதில் சீக்கியர்களைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி சீக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. படத்துக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்கில் விரைந்து முடிவெடுக்க மும்பை உயர் நீதிமன்றம் தணிக்கைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே சான்றிதழ் தர முடியும் என தணிக்கை குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தணிக்கைக் குழு வலியுறுத்திய காட்சிகளை நீக்குவதற்கு கங்கனா ஒப்புக்கொண்டார். அந்தகாட்சிகள் நீக்கப்பட்ட பின் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதை கங்கனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எமர்ஜென்சி படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். உங்கள் பொறுமைக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

x