சிவகார்த்திகேயனின் வளர்ச்சி: அஜித் பகிர்ந்த சுவாரஸ்ய விஷயம்!


நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் கண்களை உறுத்துகிறது என நடிகர் அஜித் கூறியிருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாகிறது. இதற்கான இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்து கொண்டதாவது, ”நண்பர் ஒருவரின் கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு கதவைத் திறந்ததும் அஜித் சார் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் ‘வெல்கம் டூ பிக் லீக்’ என வாழ்த்தினார்.

நான் புரியாமல் அவரைப் பார்த்தபோது, ’உங்களின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் இன்செக்யூரா ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இந்த விஷயம் நீங்கள் பெரிய இடத்துக்கு வந்துருக்கீங்க என்பதையே உணர்த்துது’ன்னு சொன்னார். நம் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அதற்குள் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அன்றுதான் புரிந்து கொண்டேன்” என்று பேசினார்.

x