இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்?


சென்னை: இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகிறது எனப் பார்க்கலாம்.

நடிகர் விமலுடைய ‘சார்’ திரைப்படம், சுனைனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராக்கெட் டிரைவர்’, வெற்றி- அனுசித்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆலன்’ திரைப்படம், ஜேம்ஸ் இயக்கியுள்ள ‘ஆர்யமாலா’ ஆகிய படங்கள் தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதோடு ‘தி வைல்ட் ரோபோட்’, ‘ஸ்மைல்2’, ‘குட் ரிச்’ ஆகிய ஆங்கிலப் படங்களும் இந்த வாரம் வெளியாகிறது.

திரையரங்குகளில் வெளியாகி இப்போது ஓடிடியில் வெளியாகும் படங்கள் பட்டியலில் சீனுராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியிலும், ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப்போர்’ அமேசான் பிரைம் ஓடிடியிலும் வெளியாகிறது. இதோடு நடிகர் நந்தாவின் ‘ஸ்நேக்ஸ் & லேடர்ஸ்’ வெப்சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடியிலும், நடிகர் ரஹ்மானின் ‘1000 பேபிஸ்’ வெப்சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும், மலையாள வெப்சீரிஸான ‘சவுல் ஸ்டோரிஸ்’ மனோரம்மா மேக்ஸையும் வெளியாகியுள்ளது.

x