‘GOAT' படம் விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்தின் காப்பியா? இயக்குநர் வெங்கட்பிரபு சொன்ன விளக்கம்


நடிகர் விஜயகாந்தின் 'ராஜதுரை’ படத்தின் காப்பி தான் ‘GOAT' படமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘GOAT' படம் வெளியானது. இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தையும் ஏஐ டெக்னாலஜி மூலம் கொண்டு வந்திருந்தனர். அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருந்தார். இதில் அப்பா விஜய் மகன் விஜயை சிறுவயதில் தொலைத்து விடுவார். பின்னாளில் கிடைக்கும் மகன் விஜய் தனது குடும்பத்தையே பழிவாங்கும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படம் விஜயகாந்த் நடிப்பில் முன்பே வெளிவந்த ‘ராஜதுரை’ படத்தின் கதை. அதைத்தான் வெங்கட்பிரபு ரீமேக் செய்து இருக்கிறார் என இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

இதற்கு சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட்பிரபு பதில் கொடுத்திருக்கிறார். அதில் பேசிய அவர், “‘GOAT' படம் வெளியான பின்புதான் இது ‘ராஜதுரை’ படத்தின் கதை என்பதே எனக்குத் தெரியும். சமூகவலைதளங்களில் எழுந்த விமர்சனங்களையும் பார்த்தேன். இந்த விஷயம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் ‘GOAT' படத்தின் கதையை சற்றே மாற்றி எடுத்திருப்பேன். அப்பா- பிள்ளை என்பது யுனிவர்சல் சப்ஜெக்ட். இது தொடர்பாக, பல படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதை எப்படி மிஸ் செய்தேன் எனத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

x