நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் தமிழில், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து தன் மகள் ஐஸ்வர்யாவைதெலுங்கில் அறிமுகப்படுத்துவதற்காக ஒரு படத்தை இயக்க இருந்தார். அதில் நாயகனாக விஷ்வக் சென் நடிக்க ஒப்பந்தமானார். அர்ஜுனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விஷ்வக் சென் விலகினார்.
இந்நிலையில் தான் இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அர்ஜுன் வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘சீதா பயணம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.