தமிழில் அறிமுகமாகும் அம்ரித் ராம்நாத்!


தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அம்ரித் ராம்நாத்.

‘8 தோட்டாக்கள்’ ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, சைத்ரா அச்சர், மீத்தா ரகுநாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை சுமார் 50% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்படாமலேயே இருந்தது. தற்போது இதற்கு அம்ரித் ராம்நாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் மலையாளத்தில் பெரும் வரவேற்பினைப் பெற்ற ‘வருஷங்களுக்கு ஷேஷம்’ படத்துக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றவை. அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக ஸ்ரீகணேஷ் படம் அமைத்திருக்கிறது.

x