’கங்குவா’ படத்தில் சூர்யாவின் கதாபாத்திர பெயர் என்ன தெரியுமா?


'கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த மாத இறுதியில் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

சரித்திர படமாக உருவாகி இருந்தாலும் நிகழ்காலம் தொடர்பான இன்னொரு போர்ஷனும் படத்தில் வருகிறது. இதில் சூர்யாவின் கதாபாத்திரப் பெயர் என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

நிகழ்காலத்தில் வரும் சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் பிரான்சிஸ் என்று சொல்லப்படுகிறது. இதுவே சரித்திர போர்ஷனில் வரும் சூர்யாவின் பெயர் கங்கா. 'கங்குவா’ படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா கார்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனது 44ஆவது படத்தின் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்தார். இதனை அடுத்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தான் நடிக்கும் 45ஆவது படத்தை நேற்று அறிவித்தார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 45ஆவது படத்தை முடித்துவிட்டே வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கிறார்.

x