அந்தரங்க வீடியோ குறித்த கமென்ட்ஸ்: ஓவியாவின் ‘தக் லைஃப்’ பதில்!


சென்னை: சமூக வலைதளங்களில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியானதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்த நெட்டிசன்களின் கமென்டுகளுக்கு நடிகை ஓவியா அளித்துள்ள ‘தக் லைஃப்’ பதில் வைரலாக பரவி வருகிறது.

’களவாணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதன் பிறகு ’மதயானைக் கூட்டம்’, ‘மூடர் கூடம்’, ‘யாமிருக்க பயமேன்’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட அவரது செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. சமூக வலைதளங்களில் அவருக்கென ஒரு ‘ஆர்மி’ உருவாகும் அளவுக்கு பிரபலம் ஆனார்.

பிக்பாஸுக்குப் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். அவை பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர், சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் ஓவியாவின் அந்தரங்க வீடியோ லீக் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவியது. இது தொடர்பாக பலரும் அவரது சமூக வலைதள பக்கங்களில் சென்று அதுகுறித்து கேள்வி எழுப்பி வந்தனர். பொதுவாக யார் தன்னை பற்றி எது சொன்னாலும் கவலைப்படாத தன்மையை கொண்ட ஓவியா இந்த விவகாரம் தொடர்பாக கூறிய பதில் வைரலாகி வருகிறது.

ஓவியாவின் இன்ஸ்டா பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் ”17 நொடி வீடியோ ஒன்று வந்துள்ளது மேடம்" என்று இட்ட கமென்ட்டுக்கு பதிலளித்துள்ள ஓவியா, “என்ஜாய்” என்று தெரிவித்துள்ளார். அதே போல மற்றொருவர், “வீடியோ இன்னும் சற்று நீளமாக இருந்திருக்கலாம்" என்று கூற, அதற்கு, “அடுத்த முறை ப்ரோ” என்று ஓவியா ரிப்ளை செய்துள்ளார். ஓவியாவின் இந்த ‘தக் லைஃப்’ பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

x