‘வேட்டையன்’ படம் பார்க்க வந்தாரா விஜய்? - வைரலாகும் வீடியோ!


சென்னை: நடிகர் விஜய் ‘வேட்டையன்’ படத்தைப் பார்க்க வந்திருப்பதாக சொல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க நடிகர் விஜய் வந்திருக்கிறார் என்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினியின் தீவிரமான ரசிகர் விஜய். ரஜினியைப் பார்த்தே நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்குள் வந்தார். இப்போது ‘வேட்டையன்’ படத்தை பார்த்துவிட்டு சைலண்டாக காரில் ஏறி புறப்பட்டிருக்கிறார் நடிகர் விஜய்.

ஆனால், இந்த வீடியோ பழைய வீடியோ என்றும் விஜய் தற்போது ‘தளபதி 69’ ஷூட்டிங்கில் இருக்கிறார் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். இன்று காலை ரோகிணி திரையரங்கில் நடிகர்கள் தனுஷ், அனிருத், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டப் பிரபலங்கள் ‘வேட்டையன்’ படத்தின் முதல் காட்சியைப் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x