நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது!


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது என்பது உறுதியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. தற்போது உயிர்- உலக் என்ற இரு மகன்களின் இரண்டாவது பிறந்தநாளை தம்பதியர் கொண்டாடிவிட்ட நிலையில், இவர்களது திருமண நிகழ்ச்சி முழுவதும் நெட்ஃபிக்ஸில் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

நயன் - விக்னேஷ் சிவனுடைய திருமண நிகழ்வுகள் முழுமையாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஏன் வெளியாகமல் இருந்தது என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

நயன் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தனர். மேலும், திருமணத்தில் ‘நானும் ரெளடிதான்’ படத்தின் சில காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட பிரபலங்களிடம் இருந்து அப்ஜக்‌ஷன் கிளியரன்ஸ் வாங்க வேண்டி இருந்ததால் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பரப்பு செய்யப்படுவதில் தாமதமானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

x