ஸ்பெயின் வீதிகளில் அஜித்துடன் ரொமாண்டிக் வாக்: ஷாலின் பகிர்ந்த வீடியோ


நடிகர் அஜித்துடன் வெளிநாட்டு வீதிகளில் ரொமாண்டிக் வாக் சென்ற ஷாலினி அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடக்கிறது. அங்கு தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார் அஜித்.

மகன் ஆத்விக் மற்றும் ஷாலினி இருவரும் கால்பந்து போட்டியை நேரில் பார்க்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்காக உடல் எடை குறைத்து கை முழுவதும் டாட்டூ குத்தியிருக்கும் அஜித்தின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், ஸ்பெயின் வீதிகளில் அஜித்துடன் ரொமாண்டிக்காக நடந்து வரும் வீடியோவை ஷாலினி பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவைப் பார்த்தப் பலரும் ‘அமர்க்களம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு...’ பாடலை இந்த வீடியோவுக்கு போட்டு பகிர்ந்து வருகின்றனர்.

x